லண்டனில் இருக்கும் மாஜி பிரதமர் நவாஸ் ஷெரீப் நாடு திரும்ப பாஸ்போர்ட்: பாக். புதிய அரசு நடவடிக்கை

இஸ்லாமாபாத்: இங்கிலாந்தில் சிகிச்சை பெற்று வரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் (72), நாடு திரும்ப தற்போதை புதிய அரசு பாஸ்போர்ட் வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானில் மூன்று முறை பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப், ஊழல் வழக்குகளால் தண்டனை பெற்றார். கடந்த 2019 நவம்பரில், லாகூர் உயர் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்ற பிறகு சிகிச்சைக்காக லண்டனுக்குச் சென்றார். அதன்பின் சமீபத்தில் நடந்த அரசியல் மாற்றங்களால் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.

அதனை தொடர்ந்து எதிர்கட்சிகளின் சார்பில் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு அமைந்தது. இந்த நிலையில், லண்டனில் சிகிச்சை பெற்று வரும் நவாஸ் ஷெரீப், பாகிஸ்தான் திரும்புவதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. அதன் ஒருபகுதியாக அவருக்கு புதிய அரசு தட்கல் முறையில் பாஸ்போர்ட் வழங்கி உள்ளதாக பாகிஸ்தானின் ஜியோ நியூஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Stories: