×

நீதிமன்ற அவமதிப்பு!: நாள்தோறும் 10,000 டாலர் அபராதம் செலுத்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்-க்கு அதிரடி உத்தரவு..!!

வாஷிங்டன்: அமெரிக்‍காவில் நீதிமன்ற அவமதிப்பு வழக்‍கில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் நாள்தோறும் 10,000 டாலர் அபராதம் செலுத்த நியூயார்க்‍ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டொனால்ட் டிரம்பின் தொழில் நடைமுறைகள் தொடர்பான ஆவணங்கள் வழங்க நியூயார்க்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதற்கு, முதலில் மார்ச் 3ம் தேதி வரையும், பின்னர் மார்ச் 31ம் தேதிவரையும் அவகாசம் அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும், டிரம்ப் தரப்பில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்படவில்லை என்பதால், அவர் நீதிமன்றத்தை அவமதித்ததாக கண்டனம் தெரிவிக்‍கப்பட்டது.

இந்நிலையில், டிரம்புக்‍கு நாள்தோறும் 10,000 டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவரை தண்டிப்பதற்காக அபராதம் விதிக்‍கப்படவில்லை என்றும் அவர் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த வேண்டும் என்பதற்காகவே அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆவணங்களை தாக்‍கல் செய்யும் வரை, நாள்தோறும் 10,000 டாலர்கள் செலுத்தவேண்டும் என்றும் நியூயார்க்‍ நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து டிரம்ப் மேல்முறையீடு செய்வார் என அவர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 10,000 அமெரிக்க டாலர் என்றால் இந்திய ரூபாய் மதிப்பில் வாரம் 7 லட்ச ரூபாய் கட்ட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Former ,President Donald Trump , $ 10,000 fine, Donald Trump, court
× RELATED ஆட்சி மாறியதும் ரகசியங்கள்...