திருவள்ளூர் பகுதி கடைகளில் பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல்: உரிமையாளர்களுக்கு அபராதம்

திருவள்ளூர்:திருவள்ளூர் பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர் தமிகத்தில் பிளாஸ்டிக் கவர் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது இதை மீறி விற்பனை செய்யும் கடையின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின்படி, மாசு கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் செந்தூர்பாண்டி, உதவி பொறியாளர் சம்பத்குமார், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) எம்.நாகூர் மீரான் ஒலி, சுகாதார அலுவலர் ஆர்.கே.கோவிந்தராஜுலு மற்றும் நகராட்சி ஊழியர்கள் திருவள்ளூர் பஜார் வீதி, தேரடி, உழவர்சந்தை, சி.வி.நாயுடு, ஜெ.என்.சாலை பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளிலும் சோதனை நடத்தினர்.

அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்த கடைக்காரர்களுக்கு ரூ.7 ஆயிரத்து 500 அபராதம் விதித்தனர். அங்கிருந்து பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர் இதுபோன்று தொடர்ந்து ஈடுபட்டால் கடைக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர் அத்துடன் பிளாஸ்டிக் தவிர்க்கவேண்டும் என்று வலியுறுத்தி கடைக்காரர்களுக்கு நகராட்சி சார்பில் இலவசமாக மஞ்சப் பை வழங்கினர்.

Related Stories: