ஐபிஎல் கிரிக்கெட் : 6 ஆயிரம் ரன்னை கடந்த தவான்

மும்பை: சென்னை அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் 6000 ரன்களை கடந்து அசத்தினார்.  நேற்று 2 ரன் எடுத்தபோது தவான் 6 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்தார்.  ஐ.பி.எல். போட்டியில் 199 இன்னிங்சில் தவான் 6086 ரன் எடுத்துள்ளார். இதில் 2 சதம், 46 அரை சதம் அடங்கும். தவான் ஐபிஎல் போட்டிகளில் 6 ஆயிரம் ரன்களை எடுக்கும் 2-வது இந்திய வீரர் ஆவார். விராட் கோஹ்லி 207 இன்னிங்சில் 6,402 ரன் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். இந்தப் பட்டியலில் ரோகித்சர்மா (5,764), டேவிட் வார்னர் (5,668), ரெய்னா (5,528) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

Related Stories: