மேட்டுப்பாளையம் அருகே சோகம் ஈன்ற குட்டியுடன் தாய் யானை பலி

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனப்பகுதிக்கு அருகில் பெண் யானை ஒன்று குட்டியுடன் இறந்து கிடந்துள்ளது. தகவலின்பேரில் வனத்துறையினர் விரைந்து வந்து ஆய்வு செய்து, உயரதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர். முதல் கட்ட விசாரணையில் இளம் பெண் யானை குட்டியை ஈன்றுள்ளது. இதில், பிரசவ சமயத்தில் உடலில் ஏற்பட்ட சிக்கலின் காரணமாக குட்டியுடன் தாய் யானையும் உயிரிழந்திருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக கால்நடை மருத்துவர் மற்றும் வனத்துறையினர் இறப்பிற்கான காரணம் குறித்து ஆய்வு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: