சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் நகரத்தார் குலதெய்வ வழிபாடு: வழித்துணை குச்சிகளை கோயிலில் போட்டு நேர்த்திக்கடன்

மயிலாடுதுறை: சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் நகரத்தார் குலதெய்வ வழிபாடு நடத்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மாட்டுவண்டி மற்றும் நடைபயணமாக யாத்திரை சென்றனர். நவகிரகங்களில் செவ்வாய் ஸ்தலமாக விளங்கும் வைத்தீஸ்வரன் கோவிலில் அருள்பாலிக்கும் தையல் நாயகி அம்மனை குலதெய்வமாக நகரத்தார் சமூகத்தினர் வழிபடுகின்றனர். ஆண்டுதோறும் சித்திரை மாதம் 2-வது செவ்வாய் கிழமை நடைபெறும் நகரத்தார் வழிபாட்டுக்கு மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இருந்து பழகிலோ மீட்டர் தொலைவிற்கு மாட்டுவண்டி மூலமாகவும், நடைப்பயணமாகவும் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு வந்து சுவாமியை வழிபாடு செய்வது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டும் பாரம்பரியம் மாறாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாட்டுவண்டியில் பயணம் செய்தும், பாதை யாத்திரையாக சென்றும் வழிபாடு நடத்தி வருகின்றனர். பூம்புகாரை பூர்விகமாக கொண்ட நகரத்தார் மக்கள் சுனாமிக்கு பிறகு காரைக்குடி, கே.சீவல்பட்டி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் குடியேறி வசித்து வருகின்றனர். பல தலைமுறைகளாக தொடரும் இந்த வழிபாடு, கடந்த 2 ஆண்டுகளில் கொரோனா தொற்று பரவல் காரணமாக நடைபெறவில்லை. நடப்பாண்டு கொரோனா தொற்று குறைந்து கொரோனா கட்டுபாடுகளை, அரசு முழுமையாக தளர்த்தி இருப்பதால் குலதெய்வ வழிபாடு செய்வதற்காக நகரத்தார் சமூகத்தினர் வைத்தீஸ்வரன் கோவிலில் குவிந்து வருகின்றனர்.   

Related Stories: