×

ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தில் குறை தீர்வு கூட்டம் 2 கிட்னி இழந்த சிறுமிக்கு உதவுமாறு தாத்தா மனு

* தொழில் தொடங்குவதற்கு கலெக்டர் ஏற்பாடு

* மகளிர் சுய உதவிக்குழுகளுக்கும் நிதி உதவி

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறை தீர்வு கூட்டத்தில் 320 பேர் கோரிக்கை மனு அளித்தனர். இந்த மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படும் என்று ஆட்சியர் உறுதி அளித்தார். இதுதவிர, மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நிதி உதவி வழங்கினார்.ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்து வருகிறது.

இதில், பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையிலான துறை அதிகாரிகள் மூலமாக  தீர்வு காணப்பட்டு வருகிறது. அதன்படி திங்கட்கிழமையான நேற்று ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வுநாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

சோளிங்கர் தாலுகா ஒழுகூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட அருந்ததியர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- கடந்த 75 ஆண்டுகளாக  எங்கள் கிராமத்திற்கு செல்ல வழிப்பாதை இல்லை. இதுதொடர்பாக பல முறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சீரான சாலை வசதி இல்லாமல் ஒற்றையடி பாதை வழியாக சென்று வருகிறோம். வாகனங்கள் செல்ல முடியாததால் கர்ப்பிணிகள், உடல் நிலை பாதித்த முதியோர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல கட்டிலில் படுக்க வைத்து அரை கிலோமீட்டர் தூரம் மெயின் ரோட்டிற்கு சென்று ஆம்புலன்ஸ் வாகனத்தில் செல்ல வேண்டியுள்ளது. மேலும், பள்ளி செல்லும் மாணவர்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
எனவே, எங்கள் பகுதிக்கு சீரான சாலை வசதி அமைத்துக்கொடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.ராணிப்பேட்டை நகரம் காரை நேரு நகரைச் சேர்ந்த குமார் என்பவர் அளித்த மனுவில், ‘நான் ஊர் ஊராக சென்று சிக்குமுடி வாங்கும் தொழில் செய்து வருகிறேன். எனது வழி பேத்தி திவ்யா(7). இவர் பிறந்த சில மாதங்களிலேயே அவளின் பெற்றோர் கைவிட்டு சென்றுவிட்டனர். சிறுவயதில் உடல் நிலை பாதிக்கப்பட்ட திவ்யாவை சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்த்தோம். பரிசோதனையில் ஒரு சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுநீரகத்தை டாக்டர்கள் அகற்றினர். இந்நிலையில், எனது குடும்ப வறுமையின் காரணமாக எனது பேத்தியை கவனித்துக் கொள்ள முடியவில்லை. எனவே, உதவித்தொகை வழங்க வேண்டும்’’ என்று கூறப்பட்டு இருந்து. மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன், தொழில் தொடங்க கடனுதவி வழங்க ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார்.

சோளிங்கர் தாலுகா வடகடப்பந்தாங்கல் கிராம மக்கள் அளித்த மனுவில், ‘எங்கள் கிராம மக்களுக்கு கடந்த 2001ம் ஆண்டு அரசு சார்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதில் 2001ம் ஆண்டு 26 பேருக்கும், 2006ம் ஆண்டு 35 பேருக்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இந்நிலையில், எங்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டா நிலம் எந்த சர்வே எண்ணில் உள்ளது என்று தெரியாததால், 20 ஆண்டுகளுக்கும் மேலாக வீடு கட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இலவச வீட்டுமனை பட்டா நிலத்தை அளவீடு செய்து அனுமதி வழங்க வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.

இதேபோல், சோளிங்கர் தாலுகா கூடலூர் காலணியைச் சேர்ந்த பொதுமக்களும், சோளிங்கர் தாலுகா கூடலூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு அளித்தனர். அதன்படி, கூட்டத்தில், மொத்தம் 320 மனுக்கள் பெறப்பட்டது.அதனைத்தொடர்ந்து, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் சார்பில் டாப்செட் கோ மூலம் கொடைக்கல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சிறகுகள் மகளிர் சுய உதவிக்குழு மற்றும் அமைதி மகளிர் சுய உதவிக்குழு ஆகியவற்றுக்கு தலா ₹6 லட்சம் கடனுதவியும், நவல்பூரைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு ₹5,400 மதிப்புள்ள தேய்ப்பு பெட்டியை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் வழங்கினார்.இதில், டிஆர்ஓ குமரேஷ்வரன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் தாரகேஸ்வரி மற்றும் அனைத்து அரசுத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Tags : Ruler ,the Ruler of the Military 2 , Ranipettai: At a meeting held at the Ranipettai Collector's office yesterday, 320 people filed a petition. This
× RELATED மக்களவை தேர்தலை முன்னிட்டு...