வல்லூர் தேசிய அனல்மின் நிலையத்தில் 1-வது அலகில் கோளாறு காரணமாக 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் வல்லூர் தேசிய அனல்மின் நிலையத்தில் 1-வது அலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 500 மெகாவாட் மின்னுற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை அருகே அமைந்திருக்கும் மீஞ்சூரை அடுத்த வல்லூரில் தேசிய அனல்மின் கழகமும், தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான கழகமும் இணைந்து, 3 அலகுகளில் தலா 500 மெகாவாட் என மொத்தம் 1,500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் 1-வது அலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 500 மெகாவாட் மின்னுற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முதலாவது அலையில் ஏற்பட்டுள்ள தொல்நூட்ப கோளாறை சரி செய்யும் பணியில் மின் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக மின்வாரிய அதிகாரிகள் தரப்பில் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 23-ம் தேதி ஏற்பட்ட 3-வது அலையில் கொதிகலன் கசிவை சீர் செய்து முழு அளவில் உற்பத்தி துவங்கிய நிலையில் இன்று மீண்டும் 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.      

Related Stories: