×

குளித்தலையில் தலைக்கவசம் போடாமல் பெட்ரோல் பங்க் வந்த 52 வாகன ஓட்டிகளுக்கு அபராதம்-போலீசார் அதிரடி

குளித்தலை : கரூர் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் குளித்தலை பகுதியில் தலைக்கவசம் போடாமல் பெட்ரோல் பங்கிற்கு வந்த 52 வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.நீதிமன்ற உத்தரவுப்படி இருசக்கர வாகன ஓட்டிகள் அவசியம் தலைக்கவசம் அணிந்து வாகனத்தை ஓட்ட வேண்டும் என உத்தரவிட்டிருந்தது அதன்படி கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவடிவேலு ஆகியோர் உத்தரவின் பேரில் முதலில் அரசு அலுவலர்கள் மற்றும் அலுவலர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து வரவேண்டும். அதனை தொடர்ந்து அரசு பணிகளுக்காக வரும் பொதுமக்கள் கட்டாயம் தலைகவசம் அணிந்து வரவேண்டும் என உத்தரவிட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது.

 இந்நிலையில் நேற்று முதல் பெட்ரோல் பங்கில் இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்ப வரும் வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே வாகனத்திற்கு பெட்ரோல் போட வேண்டும் என பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த உத்தரவு நேற்று முதல் அமலுக்கு வந்தது.

அதனை தொடர்ந்து குளித்தலை போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் நாவுக்கரசர் தலைமையில் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்குகளில் தலைக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளை நிறுத்தி 52 வாகன ஓட்டிகளுக்கு ரூ. 100 அபராதம் விதிக்கப்பட்டது மேலும் மேலும் அவர்களுக்கு தலைக்கவசம் அணிவது கட்டாயம். விபத்தில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தி அபராதம் விதிக்கப்பட்ட வாகனங்கள் மீண்டும் பிடிபட்டால் அவருடைய வாகனங்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும் என எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Tags : Kulithalai: On the orders of the Karur District Collector, 52 vehicles without helmets came to the petrol station in the Kulithalai area.
× RELATED யானை தாக்கி விவசாயி பலி