பல்லடம் அருகே SBI வங்கி கிளையில் நகை நூதன மோசடி: 144 சவரன் நகைகள், ரூ.19 லட்சம் பறிமுதல்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கேத்தனூர் SBI வங்கி கிளையில் அடமானம் வைக்கப்பட்ட நகைகளில் நூதன முறையில் திருடியது அம்பலமாகியுள்ளது. கேத்தனூரில் SBI வங்கி கிளையில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அவசர தேவைக்காக நகைகளை அடகு வைத்து கடன் பெற்றுள்ளனர். இதனை நகை மதிப்பீட்டாளர் சேகர் நூதன முறையில் திருடியுள்ளார். அடகு வைக்க வருபவர்களிடம் ஆதார் போன்றவற்றின் நகல் வேண்டும் எனக் கூறி, அவர்கள் எடுத்து வருவதற்குள் நகைகளில் இருந்து சிறிய அளவில் வெட்டி எடுத்தது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் 144 சவரன் நகைகள் மற்றும் ரூ.19 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நகைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வங்கி நிர்வாகம் மற்றும் பல்லடம் வட்டாட்சியரிடம் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை வைத்தனர். இழப்பீடுகள் வழங்க தவறினால் குடும்பத்துடன் போராட்டம் நடத்தப்படும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.    

Related Stories: