×

விராலிமலையில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு!: மாஜி அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் கொம்பன் காளை பிடிபட்டது..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் சுமார் 600 காளைகள் பங்கேற்றுள்ளன. விராலிமலை மெய்யகுன்றியால் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி காலை 8.45 மணிக்கு தொடங்கியது. மாலை வரை சுமார் 600 காளைகள் களமிறக்கப்படும் இந்த போட்டியில், 200 மாடுபிடி வீரர்கள், 3 சுற்றுகளாக களம்காண்கின்றனர். வாடிவாசலில் இருந்து சீறி பாய்ந்து வரும் காளைகளை திறமையுடன் பிடிக்கும் வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இப்போட்டியில் முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் கொம்பன் காளை பிடிபட்டது. இதனால் ஆத்திரமடைந்த விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள், காளையை பிடித்த வீரரை தாக்க முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சக குழுவினரும், விழா குழுவினரும் விஜயபாஸ்கரின் ஆதரவாளர்களை கண்டித்ததால் அவர்கள் அங்கிருந்து கிளம்பி சென்றனர். அதனை தொடர்ந்து போட்டி சுமூகமாக நடைபெற்று வருகிறது.


Tags : Jalhikkkatu ,Viralimalaya ,Maji Minister ,C. Vijayapascar , Viralimalai, Chithirai Festival, Jallikattu
× RELATED மாஜி அமைச்சர் ஜெயக்குமார் அளித்த...