திண்டுக்கல் அருகே நகைக்கடை சுவரில் துளையிட்டு கொள்ளையடிக்க முயன்ற 3 பேரை கைது செய்தது தனிப்படை போலீஸ்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே நகைக்கடையின் சுவரில் துளையிட்டு உள்ளே புகுந்து நகைகளை திருட முயன்ற 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். வேடசந்தூர் அடுத்த அய்யலூர் ரயில் நிலையம் செல்லும் சாலையில் செந்தில்குமார் என்பவருக்கு சொந்தமான நகைக்கடை  ஒன்று உள்ளது. நேற்று நள்ளிரவில் நகருக்கடையின் பின்பக்க சுவரில் மர்ம நபர்கள் சிலர் துளையிட்டு கொண்டிருப்பதை கண்ட பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்ததும் அவர்கள் தப்பியோட முயற்சித்தனர். இருவர் தப்பியோடிய நிலையில் ஒருவரை போலீசார் துரத்தி பிடித்தனர். பிடிபட்ட நபரிடம் நடத்திய விசாரணையில் நகைக் கடையில் கொள்ளையடிக்க முயன்றது, அதேபகுதியை சேர்ந்த அழகுபாண்டி, மாணிக்கம், கணேசன் என்பது தெரிய வந்தது. இதையடுத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார் கணேசன், அழகுபாண்டி ஆகியோரையும் பிடித்து சிறையில் அடைத்தனர். துரிதமாக செயல்பட்டு கொள்ளை சம்பவத்தை தடுத்த போலீசாரை காவல் கண்காணிப்பாளர் நேரில் அழைத்து பாராட்டினார்.  

Related Stories: