வடமாநில பெண் மானபங்கம் பாஜ பொதுச்செயலாளர் உதவியாளர் கைது

ஆலந்தூர்: வடமாநில பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற பாஜ பிரமுகரின் உதவியாளரை போலீசார் கைது செய்தனர். பழவந்தாங்கல் பக்தவச்சலம் நகரில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் 2ம் தளத்தில் ரிங்கி என்பவருடன் பேயிங் கெஸ்டாக தங்கி இருப்பவர் மும்பையை சேர்ந்த பூஜாநட்வர் (27). தனியார் ஐடி நிறுவன ஊழியர். அதே கட்டிடத்தில் தரை தளத்தில் ரிங்க்கியின் சகோதரர் பவன் (25) தங்கியுள்ளார். இவர், ஐடி நிறுவனத்தில் வேலை பார்ப்பதுடன் பாஜ மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜனின் உதவியாளராகவும் உள்ளார். இந்நிலையில் நேற்று பவன் வீட்டை சுத்தம் செய்யும்படி பூஜாவிடம் கூறினார். இதனால் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது. சண்டை முற்றியபோது பவன், பூஜாவின் மேலாடையை கிழித்து கையால் தலை, இடது தோள்பட்டைகளில் அடித்தும் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதுகுறித்து பூஜா, பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். ஆய்வாளர் சபரிநாத் வழக்குப்பதிவு செய்து பவனை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: