சென்னையில் கடல் ஆமைகள் பாதுகாப்பு மையம் அடையாறு, கூவம், பக்கிங்ஹாம் கரைகளில் பசுமை தோட்டம்: வனத்துறை அமைச்சர் அறிவிப்பு

சென்னை: சட்டப் பேரவையில் நேற்று வனத்துறை மீதான மானிய கோரிக்கையின் போது அமைச்சர் ராமச்சந்திரன் வெளியிட்ட அறிவிப்பு: நீலக்கரிம உள்ளிருப்புக்கான முன்னெடுப்பிற்கு பெரிய ஊக்கமளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசால் ரூ.4.14 கோடி செலவில் மாபெரும் அலையாத்தி காடுகளின் மீளுருவாக்கம் மற்றும் நடவுப் பணிகள் 1050 ஹெக்டேர் பரப்பளவில் செயல்படுத்தப்படும். மன்னார் வளைகுடாவில் 3.6 ஹெக்டெர் பரப்பளவில் பவள பாறைகளின் மீளுருவாக்க பணிகளுக்காக ரூ.3.6 கோடி செலவில் பவளப்பாறைகள் ஆராய்ச்சி, கணிகாணிப்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகள் அரசால் மேற்கொள்ளப்படும்.

ஆமைகள் பாதுகாப்பு முயற்சிகளை ஊக்கப்படுத்த சென்னையில் ரூ.6.3 கோடி செலவில் சர்வதேச ஆமைகள் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையம் அமைக்கப்படும். நகர மற்றும் புறநகர் பகுதிகளில் பசுமை பரப்பை அதிகரிக்க 3.42 கோடி மரக்கன்றுகள் ரூ.237 கோடி செலவில் அடையாறு, கூவம் மற்றும் பக்கிங்ஹாம் கால்வாய் கரைகளில், கரிம உள்ளிருப்பு விளைவுகளுக்காகவும், வெப்பமயமாவதின் விளைவினை குறைக்கவும் கரையோர பசுமை தோட்டங்கள் உருவாக்கப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: