‘மணி அடிக்க கூடாது பாப்பா’: தி.மு.க. எம்எல்ஏ உதயசூரியன் பேச்சால் சிரிப்பலை

சட்டப்பேரவையில் நேற்று வனத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று சங்கராபுரம் உதயசூரியன் பேசுகையில், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1867ம் ஆண்டு கோட்டையில் வைக்கப்பட்ட 150 அடி உயர மரக் கொடிக்கம்பம் குறித்து பேசிக் கொண்டிருந்தார்.அவருக்கு ஒதுக்கப்பட்ட 10 நிமிடம் முடிந்ததை நினைவூட்ட, துணை சபாநாயகர் பிச்சாண்டி, மணி அடித்தார். ஆனால், தொடர்ந்து உறுப்பினர் உதயசூரியன் பேசினார்.

அப்போது அவர், ‘‘ஓடி விளையாடு பாப்பா, நீ ஓய்ந்திருக்க லாகாது பாப்பா, கூடி விளையாடு பாப்பா. மணி அடிக்க கூடாது பாப்பா...’’ என்று, துணை சபாநாயகர் பிச்சாண்டி, மணி அடித்ததை சுட்டிக்காட்டி பேசினார். அவரது இந்த நகைச்சுவை பேச்சால் அவையில் சிரிப்பலை எழுந்தது.

Related Stories: