சென்னை ஐஐடி வளாகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 78 ஆக உயர்வு

சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் கொரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளது. சென்னை ஐஐடியில் நேற்றுமுன்தினம் வரை 60 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு இருந்தது. இதைதொடர்ந்து நேற்று மேலும் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால், கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 78 ஆக உயர்த்துள்ளது. இந்நிலையில், ஐஐடியில் கொரோனா பாதித்த மாணவர்கள் மற்றும் பரிசோதனை செய்யும் மாணவர்களை, சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று சந்தித்து பேசினார்.

பின்னர் அவர் கூறுகையில், ‘‘ஐஐடி வளாகத்தில் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று, 687 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்து முடிக்கப்படும். அதேபோல், தமிழகத்தில் கொரோனா அறிகுறி இருப்பவர்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்றார்.

Related Stories: