திருத்தணியில் 104 டிகிரி வெயில்: தமிழகத்தில் மழையும் பெய்யும்

சென்னை: தமிழகத்தில் நேற்று அதிகரித்த வெயிலின் காரணமாக திருத்தணியில் 104 டிகிரி வெயில் நிலவியது. வேலூரில் 102 டிகிரி வெயில் நிலவியது. இந்நிலையில், இலங்கை மற்று அதை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தொடர்ந்து நீடித்து வரும் கோடை வெயில் காரணமாக பெரும்பாலான இடங்களில் வெயில் அதிகரித்து வெப்ப சலனம் ஏற்பட்டு மழை பெய்து வருகிறது. இதற்கிடையே, திருத்தணியில் நேற்று அதிகபட்சமாக 104 டிகிரி வெயில் கொளுத்தியது. வேலூர் 102 டிகிரி, திருச்சி, மதுரை 100 டிகிரி, ஈரோடு, கரூர், பாளையங்கோட்டை, தஞ்சாவூர் 99 டிகிரி, சென்னையில் 97 டிகிரி வெயில் நிலவியது.

அதிக வெயில் காரணமாக வெப்ப சலனம் ஏற்பட்டு வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி உருவானது. அதன் காரணமாக  தென் தமிழகம், நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி கரூர், மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை நேற்று  பெய்தது. அதன் தொடர்ச்சியாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள்  அதை ஒட்டிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும். அதே நிலை 28ம் தேதி வரை நீடிக்கும்.

Related Stories: