×

சென்னையில் ரூ.2 கோடியில் மற்றொரு குத்துச்சண்டை அகாடமி: சட்டசபையில் அமைச்சர் மெய்யநாதன் அறிவிப்பு

சென்னை: சட்டப்பேரவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்  துறை மானியக்கோரிக்கையின் போது அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வெளியிட்ட  அறிவிப்பு:
* பொதுமக்களுக்கு விளையாட்டில் விழிப்புணர்வை ஏற்படுத்தும்  வண்ணம் தமிழ்நாட்டில் 10 இடங்களில் ₹30 கோடியில் சிறு விளையாட்டு அரங்கம்  அமைக்கப்படும்.
* தமிழ்நாட்டில் உள்ள விளையாட்டு வீரர்கள்,  வீராங்கனைகளுக்கு சர்வதேச பயிற்சியாளர்களை கொண்டு ₹5 கோடி செலவில்  பயிற்சி அளிக்கப்படும்.
* மாநில விளையாட்டு சங்கங்களுக்கு வழங்கப்படும் நிதியுதவியினை ₹3 கோடியே 31 லட்சத்தில் இருந்து ₹4 கோடியாக உயர்த்தி  வழங்கப்படும்.
* சென்னை நகராமானது பாரம்பரியமாகவே குத்துச்சண்டை விளையாட்டிற்கு புகழ் பெற்றது. பல்வேறு குத்துச்சண்டை வீரர்கள் உருவாகி  குத்துச்சண்டை விளையாட்டில் புகழ்பெற்று விளங்கினர். தமிழ்நாட்டில்  குத்துச்சண்டை   விளையாட்டை மீண்டும் புகழ்பெற செய்ய, பல்வேறு உலகபுகழ் பெற்ற  குத்துச்சண்டை வீரர்களை உருவாக்குவது அவசியமானதாகும். எனவே, சென்னையில்  இளைஞர்களின் குத்துச்சண்டை ஆர்வத்தினை ஊக்குவிக்க ₹2 கோடி செலவில்    மற்றுமொரு குத்துச்சண்டை அகாடமி அமைக்கப்படும்.
* விளையாட்டு வீரர்கள் நல நிதிக்கான நிதிய மூலதனத்தை ₹20 லட்சத்தில் இருந்து ₹50 லட்சமாக உயர்த்தப்படும்.
* தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திறனை மேம்படுத்தி மின்னணு ஆளுமை முறைகள் செயல்படுத்தப்படும்.
* நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு தற்போது வழங்கி வரும்  ஓய்வூதியம் ₹3 ஆயிரத்தில் இருந்து ₹6 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
* தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு தற்போது இருக்கும் 1 மணி நேர சிற்றுண்டி படித்தொகையை ₹10-ல் இருந்து ₹25 ஆக உயர்த்தப்படும்.
* தேசிய, சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் பங்கேற்கும் வகையில் தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க 50 மீட்டர் தடுப்பு துப்பாக்கி சூடு வரம்பு கட்டுமானம் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு   பல்கலைக்கழக வளாகத்தில் ₹1.10 கோடி செலவில் அமைக்கப்படும்.
* தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் புதிதாக  தொடங்கப்பட்ட 3 இளங்கலை பாடத்திட்டத்திற்கு கூடுதல் வகுப்பறைகளுக்கான கட்டிடங்கள் ₹5 கோடியே 83 லட்சத்து 50 ஆயிரம் செலவில் கட்டப்படும்.   இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags : Chennai ,Minister ,Meyyanathan , Another Rs 2 crore boxing academy in Chennai: Minister Meyyanathan's announcement in the assembly
× RELATED முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்