கே.எல்.ராகுலுக்கு அபராதம்

மும்பைக்கு எதிராக நேற்று முன்தினம் நடந்த லீக் ஆட்டத்தில், பந்துவீச கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டதால் லக்னோ கேப்டன் கே.எல்.ராகுலுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நடப்புத் தொடரில் 2வது முறையாக ராகுலுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. ஏற்கனவே இப்படி மும்பைக்கு  எதிராக ஏப்.16ல் நடந்த ஆட்டத்திலும் தாமதமாகப் பந்துவீசியதற்காக ராகுலுக்கு மட்டும் ரூ.12லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இது 2வது முறை என்பதால் ஆடும் அணியில் இடம் பெற்ற லக்னோ வீரர்களுக்கும் தலா ரூ.6 லட்சம் ரூபாய் (போட்டிக்கான கட்டணத்தில் 25%) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதே தவறு மீண்டும் நடந்தால்  ராகுலுக்கு 100% அபராதத்துடன் ஒரு ஆட்டத்தில் விளையாடவும் தடை விதிக்கப்படும். மற்ற வீரர்களிடம் தலா ரூ.12 லட்சம் அபராதம் வசூலிக்கப்படும்.

Related Stories: