×

சிரஞ்சீவி படத்திலிருந்து காஜல் காட்சிகள் நீக்கம் ஏன்? இயக்குனர் விளக்கம்

சென்னை: சிரஞ்சீவி மற்றும் அவரது மகன் ராம்சரண் நடித்துள்ள படம் ஆச்சார்யா. இதில் ராம்சரண் ஜோடியாக பூஜா ஹெக்டேவும், சிரஞ்சீவி ஜோடியாக காஜல் அகர்வாலும் நடித்திருந்தனர். சமீபத்தில் இந்த படத்தின் அறிமுக விழா நடந்தது. அப்போது படத்தின் விளம்பரத்தில் காஜல் அகர்வால் படம் இடம்பெறவில்லை. அவர் குறித்து யாரும் பேசவும் இல்லை. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறி்த்து படத்தின் இயக்குனர் கொரட்டலா சிவா கூறியதாவது: சிரஞ்சீவி ஜோடியாக காஜல் அகர்வால் நடித்தார். படத்தின் முழுமை பெறாத (ரஷ்) காப்பியை போட்டு பார்த்தபோது அவரது கேரக்டர் மிகச் சிறியதாக இருந்தது. ஒரு பெரிய நடிகைக்கு முக்கியத்துவம் இல்லாத காட்சிகளை கொடுக்க வேண்டாம் என்று நீக்க முடிவு செய்தோம். இதை அவரிடம் தெரிவித்தோம். அவரும் சூழ்நிலையை புரிந்துகொண்டு மனப்பூர்வமாக ஒப்புக் கொண்டார். அதனால் அவர் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டது. என்றாலும் ஒரு பாடல் காட்சியில் அவர் தோன்றுவார். இவ்வாறு சிவா கூறினார். படம் வருகிற 29ம் தேதி வெளிவருகிறது.

Tags : Kajal ,Chiranjeevi , Why Kajal scenes were removed from Chiranjeevi movie? Director Description
× RELATED திருத்தணி அருகே வாகன சோதனையின்போது ரூ.25.90 லட்சம் பறிமுதல்..!!