×

அக்‌ஷய்குமார், சூர்யா இணையும் படம்

மும்பை: சூரரைப் போற்று இந்தி ரீமேக்கில் அக்‌ஷய்குமார், சூர்யா இணைகின்றனர். சுதா கொங்கரா இந்தி ரீமேக்கையும் இயக்குகிறார். படத்துக்கு பெயரிடவில்லை. இதில் சூர்யா வேடத்தில் அக்‌ஷய் குமார் நடிக்கிறார். தனது 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் இப்படத்தை சூர்யா தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் மும்பையில் நேற்று தொடங்கியது. அப்போது நடந்த பூஜையில் சூர்யா, அக்‌ஷய்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் உடனிருந்தனர்.


Tags : Akshay Kumar ,Surya , Akshay Kumar, Surya co-starrer
× RELATED Eid Movies: ஏப்ரல் 11ம் தேதி வெளியாகும் படே மியான் சோட் மியான் திரைப்படம்!