இரண்டாவது திருமணமா? நாக சைதன்யா பதில்

ஐதராபாத்: நடிகை சமந்தாவை காதலித்து மணந்த நடிகர் நாக சைதன்யா, கருத்து வேறுபாடால் அவரை பிரிந்துவிட்டார். இந்நிலையில் நாக சைதன்யா இரண்டாவது திருமணத்துக்கு தயாராகி விட்டதாகவும் அவருக்கு பெண் பார்க்கும் படலத்தை அவரது பெற்றோர்கள் தொடங்கி விட்டதாகவும் கூறப்பட்டது. மேலும் இரண்டாவது திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்த நாக சைதன்யா, மணப்பெண் நடிகையாக இருக்க கூடாது என்று நிபந்தனை விதித்ததாகவும் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள நாக சைதன்யா, ‘நானும் சமந்தாவும் இன்னும் சட்டபூர்வமாக பிரியவில்லை. அதற்குள் இரண்டாவது திருமணத்துக்கு தயாராகி விட்டதாக வதந்தி கிளம்பியுள்ளது. இது வருத்தம் அளிக்கிறது. தயவு செய்து இது போன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம்’ என கூறியுள்ளார்.

Related Stories: