×

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்களுக்கு ஆன்லைன் டிக்கெட்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவில் சிறப்பு முன்னுரிமை தரிசன டிக்கெட்டை நாளை முதல் ஆன்லைனில் பெறலாம் என கோவில் நிர்வாகம் கூறியுள்ளது. மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு சிறப்பு முன்னுரிமை தரிசன டிக்கெட் வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் மே மாதம் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஆன்லைன் டிக்கெட் நாளை வெளியிடப்பட உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மே மாதம் சுவாமி தரிசனம் செய்வதற்காக மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நீண்டகால தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு நாளை காலை வெளியிடப்பட உள்ளது. மே மாதம் சுவாமி தரிசனம் செய்வதற்காக முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நீண்ட கால தீராத நேயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நாள் ஒன்றுக்கு ஆயிரம் டிக்கெட்டுகள் https://tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யும் விதமாக நாளை காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.

எனவே இந்த டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொண்ட பக்தர்கள் தினமும் காலை 10 மணிக்கும், வெள்ளிக்கிழமைகளில் மட்டும் மாலை 3 மணிக்கும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். தரிசனம் செய்யவரும், மூத்த குடிமக்கள் வயது சான்றிதழ், மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ், நீண்ட கால தீராத நோய் உள்ளதற்கான மருத்துவச் சான்றிதழை கட்டாயம் கொண்டு வர வேண்டும். எனவே பக்தர்கள் இதை கவனத்தில் கொண்டு டிக்கெட் முன்பதிவு செய்யுமாறு தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Tirupathi Seven , Tirupati Seven Hills, Disabled, Senior Citizens, Tickets
× RELATED திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க...