டெல்லியில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து: ஒருவர் மீட்கப்பட்ட நிலையில் மீட்பு பணிகள் தீவிரம்..!

டெல்லி: டெல்லி சத்யா நிகேதன் பகுதியில் மூன்று மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தலைநகர் டெல்லியின் தெற்கு டெல்லி பகுதியான சந்தியா நிகேந்தன் பகுதியில் 3 மாடி கட்டிடம் ஒன்று பணி நடைபெற்று வரும் நிலையில் இன்று மதியம் 1.25 மணி அளவில், திடீரென இடிந்து விழுந்தது. கட்டிட பணிகள் நடைபெற்று வரும் போது இந்த விபத்து ஏற்பட்டது. சின்டெல்ஸ் பாரடிசோவின் 18 மாடி டவர் D இல் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் 6 வாகனங்களில் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் 5க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அப்பகுதியில் மீட்பு பணிகள் மேற்கொள்வதில் சவாலாக இருப்பதாக தீயணைப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அப்பகுதி மகள்களுடன் இணைந்து மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே ஈடுபாடுகளில் சிக்கிய ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.

கேஸ் வெல்டிங் இயந்திரங்கள் உதவியுடன், ஈடுபாடுகளில் சிக்கிய நபரை தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்டனர். இதனிடையே மீட்பு பணிகளை விரைவுப்படுத்தி விபத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு விரைந்து சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திலேயே ஆம்புலஸ் உள்ளிட்ட வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன.

Related Stories: