பெண் பலாத்காரம்: வீடியோ எடுத்து மிரட்டல்; வாலிபர் கைது

அம்பத்தூர்: சென்னை வில்லிவாக்கம் பாபா நகர் பகுதியை சேர்ந்தவர்கள் குமார் (30). இவரது மனைவி விஜயா (28) (பெயர்கள் மாற்றம்). இவர்களுடன், அதே பகுதியை சேர்ந்த தனஞ்ஜெயன் (29) மற்றும் அவரது குடும்பத்தினர் நட்பாக பழகி வந்தனர். இந்நிலையில் தனஞ்ஜெயனுக்கு அவசரமாக பணம் தேவைப்பட்டுள்ளது. உடனே குமார்-விஜயா தம்பதியிடம் கேட்டுள்ளார். உடனே அவர்களும் சம்மதித்து, 2 ஆண்டுகளுக்கு முன் ₹1 லட்சம் மற்றும் விஜயா வின் அரை பவுன் கம்மலை கொடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் கடந்தாண்டு, ஜுலையில் கடனை கேட்க தனஞ்ஜெயனின் வீட்டுக்கு விஜயா சென்றார். அந்த நேரத்தில், விஜயாவை தனஞ்ஜெயன் வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்துள்ளார்.

அதை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இதுபற்றி வெளியே சொன்னாலோ, கடனை திருப்பி கேட்டாலோ பலாத்கார வீடியோ சமூக வலைதளத்தில் வெளியிட்டு அசிங்கப்படுத்தி விடுவேன்’ என்று தனஞ்ஜெயன் மிரட்டியுள்ளார். அதனால் கடந்த 20ம் தேதி வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விஜயா புகார் அளித்தார். போலீசார் இன்று காலை தனஞ்ஜெயனை பிடித்து விசாரித்தனர். அவரது செல்போனில் விஜயாவின் படங்களும் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போக்சோ உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தனஞ்ஜெயனை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: