பப்ஜி மதனுக்கு எதிராக சென்னை மாநகர காவல் ஆணையர் பிறப்பித்த குண்டர் சட்டம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பப்ஜி மதனுக்கு எதிரான குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஆன்லைன் பப்ஜி விளையாட்டை யூட்யூப் சேனலில் நேரலையாக ஒளிபரப்பி, ஆபாசமாக பேசி பெண்களை கீழ்தரமாக பேசியும் பணம் வசூலித்தார் என்று யூடியூபர் பப்ஜி மதனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

ஏராளமான புகார்கள் வந்ததால், அவரை சைபர் சட்ட குற்றவாளி எனக்கூறி, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர், கடந்த ஆண்டு ஜூலை 5-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, மதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்து இருந்தார்.

அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. பப்ஜி மதன் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், நக்கீரன் அமர்வு விசாரணை நடத்தியது. அப்போது சென்னை மாநகர காவல் ஆணையர் பிறப்பித்த உத்தரவை ஐகோர்ட் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

Related Stories: