அல்லேரி மலையில் போலீஸ் ரெய்டு 500 லிட்டர் கள்ளச்சாராயம் அழிப்பு

வேலூர் : பள்ளிகொண்டா அடுத்த அல்லேரி மலையில் நடந்த ரெய்டில் 500 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் அடுப்பு மற்றும் ஊறல்களை அழித்தனர்.வேலூர் மாவட்டத்தில் மலை கிராமங்களை ஒட்டிய வனப்பகுதிகளில் தொடர்ந்து கள்ளச்சாராய ரெய்டை மதுவிலக்கு போலீசார் மற்றும உள்ளூர் சட்டம் ஒழுங்கு போலீசார் தனித்தனியாகவும் கூட்டாகவும் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று எஸ்பி ராஜேஷ்கண்ணன் உத்தரவின்பேரில் ஏடிஎஸ்பி சுந்தரமூர்த்தி மேற்பார்வையில் பள்ளிகொண்டா இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி தலைமையிலான போலீசார் அல்லேரி மலையில் அதிரடி சாராய ரெய்டு நடத்தினர்.அப்போது போலீசார் வருவதை பார்த்து கள்ளச்சாராய ஆசாமிகள் தப்பி ஓடி தலைமறைவாயினர். அங்கு சென்ற போலீசார் 500 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் ஊறல் ஆகியவற்றை அழித்தனர். அத்துடன் கள்ளச்சாராயம் காய்ச்சும் அடுப்பையும் அழித்தனர்.

Related Stories: