நெல்லை தாமிரபரணி தூய்மை பணியில் சினிமா பாடலை மாற்றி பாடிய தீயணைப்பு நிலைய அலுவலர்-சமூக வலைதளங்களில் வைரலாக பரவல்

நெல்லை : நெல்லை தாமிரபரணி ஆற்றினை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக  பாளை தீயணைப்பு நிலைய அலுவலர் திரைப்பட பாடலை மாற்றி பாடி உற்சாகப்படுத்தியது சமூக வலைதளங்களில் வரைலாக பரவி பலரின் பாராட்டுக்களை பெற்றது. நெல்லை மாவட்டத்தில் வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி ஆற்றினை மாணவர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் 62 கிலோ மீட்டர் வரை சுத்தப்படுத்தினர்.

இந்த பணியில் ஈடுபட்டவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக பாளை தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய அலுவலர் வீரராஜ் தனது குழுவினருடன் நெல்லை சந்திப்பு முத்துமாரியம்மன் கோயில் தாமிரபரணி ஆற்று பகுதியில் படகில் சென்று மைக்கில் ‘சொர்க்கமே என்றாலும் அது திருநெல்வேலி போல் ஆகுமா, எந்த ஆறு ஆனாலும் நம் தாமிரபரணி போலாகுமா, இதில்் குப்பை கொட்டாமல் சுத்தம் செய்து பாதுகாக்க வேண்டும்’ என பாடலை மாற்றி பாடினார்.

இந்த பாடல் நடிகர் ராமராஜன் நடித்த ஊரு விட்டு ஊரு வந்து படத்தில் உள்ள பாடலாகும். இந்த பாடலை சூழ்நிலைக்கு ஏற்ப நிலை அலுவலர் வீரராஜ் தனது குழுவினருடனும் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர்் பெருமாள் முன்னிலையில் பாடினார். மேலும் இவரது பாடல் சமூக வலைதளங்களில் வரைலாக பரவியதையடுத்து அவரை பலர் பாராட்டினார்.

Related Stories: