×

தென்காசி, நெல்லை மாவட்டங்களில் கிராம சபை கூட்டம்

தென்காசி : தென்காசி ஊராட்சி ஒன்றியம் குத்துக்கல்வலசையில் தேசிய பஞ்சாயத்து ராஜ் தின சிறப்பு கிராம சபை கூட்டம் கலெக்டர் கோபாலசுந்தர்ராஜ் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்து விவாதிக்கப்பட்டு உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. கூட்டத்தில் உதவி இயக்குனர் பிரான்சிஸ் மகாராஜன், வேளாண்மை உதவி இயக்குனர் கனகா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சண்முகசுந்தரம், குழந்தை மணி.

ஊராட்சி செயலாளர் வெங்கடாச்சலம், குத்துக்கல்வலசைஊராட்சி மன்றத் தலைவர் சத்யராஜ், ஒன்றிய கவுன்சிலர்கள் அழகுசுந்தரம், பிரியா, ஊராட்சி வார்டு உறுப்பினர்கள்அம்புலி, கண்ணன், இசக்கி தேவி, கலைச்செல்வி, சங்கரம்மாள், மைதீன் பாத்து, சந்திரா, மல்லிகா, கருப்பசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வறுமையில்லா ஊராட்சி என்பது, யாரும் மீண்டும் வறுமை நிலைக்கு சறுக்கிவிடாத அளவிற்கு சமூக பாதுகாப்பு கொண்டிருக்க வேண்டும்.

அனைவருக்கும் மேம்பட்ட வாழ்க்கை சூழல், வளர்ச்சி மற்றும் செழிப்பு என்ற நிலையை ஏற்படுத்தும் கிராம ஊராட்சியாக அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.  கடையநல்லூர்  ஒன்றியம் கம்பனேரி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.  கூட்டத்திற்கு தலைவர் சொர்ணம் கணேசன் தலைமை வகித்தார். மண்டல துணை வட்டார  வளர்ச்சி அலுவலர் கந்தசாமி, விற்பனைக்கூட கண்காணிப்பாளர் உமாதேவி முன்னிலை  வகித்தனர். ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கௌரி கருப்பசாமி வரவேற்றார். யூனியன்  சேர்மன் சுப்பம்மாள் பால்ராஜ் சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் உதவி  பொறியாளர் விஜய், கிராம நிர்வாக அலுவலர்கள் மாசான மூர்த்தி, முருகையா,  கிராம உதவியாளர் ஆரோக்கியசாமி மற்றும் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து  கொண்டனர். ஊராட்சி மன்ற செயலாளர் ராஜதுரை நன்றி கூறினார். கூட்டத்தில்  குடிசை இல்லா கிராமங்களை உருவாக்குதல், அனைவருக்கும் கழிப்பறை வசதி செய்து  கொடுப்பது, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி செய்து கொடுப்பது,அனைத்து கிராமங்களிலும் வாறுகால் வசதி செய்தல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 கடையம் யூனியன் பொட்டல்புதூர் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் துரை முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வேளாண்மை துறை சண்முகசுந்தரம், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முருகப்பா, வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலாளர் மாரியப்பன் நன்றி கூறினார்.

கடையம் யூனியன் கோவிந்தபேரி ஊராட்சியில் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்திற்கு தலைவர் டிகே பாண்டியன் தலைமை வகித்தார். ஓவர்சியர் திருமலைக்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கடையம் வட்டார வளர்ச்சி அலுவலர் கணேசன் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் வனத்துறை ஓய்வு மாணிக்கம், சிங்கக்குட்டி, முன்னாள் துணைத்தலைவர் தங்கவேல், அதிமுக சங்கர், தேமுதிக கோவிந்தன், காங்கிரஸ் முத்துராஜ், ராசா குட்டி, விவசாய சங்க தலைவர் கல்யாணசுந்தரம் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி மன்ற துணை தலைவர் இசேந்திரன் நன்றி கூறினார்.

 கடையம் யூனியன் ஏபி நாடானூரில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் அருணாச்சலம் ( எ)அழகுதுரை தலைமை வகித்தார். துணைத்தலைவர் முருகன் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர் பாலக செல்வி, வார்டு உறுப்பினர்கள் கனகவல்லி, காளீஸ்வரி, சீதாலட்சுமி, ராமர் , மாரியம்மாள், மாரிசெல்வம், ராமலட்சுமி, செயலாளர் ராமர் கனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தெற்கு கடையம் ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் முத்துலெட்சுமி ராமதுரை தலைமை வகித்தார். இதில் துணைத்தலைவர் மகாலிங்கம், கடையம் யூனியன் பற்றாளர் செண்பகம், வார்டு உறுப்பினர்கள், செயலாளர் பழனியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.கடையம் யூனியன் ரவணசமுத்திரம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் முகம்மது உசேன் தலைமை வகித்தனர். பற்றாளராக ஒன்றிய பணி மேற்பார்வையாளர் குளோரி முன்னிலை வகித்தார்.

ஒன்றிய கவுன்சிலர் மணிகண்டன்,ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ராமலட்சுமி,வேளாண்மை துறை அதிகாரி ஜெகன், வார்டு உறுப்பினர்கள் முகம்மது யஹ்யா,மொன்னா முகம்மது,கோமதி,ஜானகி ராமன்,மெகருன்னிசா,அப்துல் காதர்,கனகா ஊர் தலைவர்  பரமசிவன்,அங்கன்வாடி பணியாளர்கள்,மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.ஊராட்சி மன்ற செயலாளர் மாரியப்பன் நன்றி கூறினார்.

வாசுதேவநல்லூர் அருகேயுள்ள உள்ளார் (எ) தளவாய்புரம் கிராமத்தில்  சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மன் பொன் முத்தையா தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஜெயராமன், ஊராட்சி மன்ற தலைவர் சகுந்தலா, துணைத்தலைவர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் கொல்லம்-மதுரை சாலையில் உள்ளார் (எ)தளவாய் புரம் பேரூந்து நிலையத்தில் பேரூந்து நின்று செல்ல வேண்டும்.

ஏழை, எளிய மக்களை வறுமை கோட்டிற்கு கீழ் வசிப்பவர்களின் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டும். உள்ளாரில் ஊருக்கு வெள்ள நீர் வருவதால் தடுப்பு சுவர் கட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. யூனியன் துணைத் தலைவர் சந்திரமோகன், காவல் ஆய்வாளர் மனோகரன், வேளாண்மை அலுவலர் பார்வதி, கூட்டுறவு சங்கம் செயலர் சௌந்தரராஜன், கணேசன், ஊராட்சி செயலர் (பொ) கருப்பசாமி மற்றும் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

அம்பாசமுத்திரம் ஒன்றியம் வைராவிகுளம் கிராமத்தில் பஞ்சாயத்து தலைவர் பிச்சம்மாள் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. துணைத்தலைவர் ஐயப்பன், வேளாண் உதவி இயக்குனர் உமா மகேஸ்வரி, வட்டார திட்ட வளர்ச்சி அலுவலர் ராஜம் முன்னிலையில் கிராம சபை கூட்டம் நடந்தது. யூனியன் சேர்மன் பரணிசேகர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இதில் ஊராட்சி உறுப்பினர்கள் செல்லபெருமாள், குமார், சத்யா, ஆறுமுக நயினார், கவிப்பிரியா, சகாய பிருந்தா, மாரியம்மாள், ஜெயசித்ரா உள்பட கிளார்க் ரவி, வக்கீல் பாபநாசம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

ஜமீன் சிங்கம்பட்டி கிராமத்தில் பஞ். தலைவர் செந்தில் குமார் தலைமையில் துணைத்தலைவர் பேச்சியம்மாள், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஷ், கிராம அதிகாரி அன்னமரியாள், வேளாண் அலுவலர்கள் ஈழவேணி, விஜயலட்சுமி முன்னிலையில் கிராம சபை கூட்டம் நடந்தது. ஊராட்சி உறுப்பினர்கள் பரமசிவன், இசக்கி, கோமதி செயலர் சிவப்பிரியா, மக்கள் நல பணியாளர் வேம்பு முருகன் உள்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

அம்பை ஒன்றியம் அயன்சிங்கம்பட்டி  ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு தலைவர் முத்துகிருஷ்ணன் தலைமை  வகித்தார். துணைத்தலைவர் சுடலை அரசன், ஊராட்சி உறுப்பினர் மகேஷ்வரி, ஊர் நல  அலுவலர் சுந்தராம்பாள், தோட்டக்கலை அலுவலர் ராமகிருஷ்ணன் , கிளார்க்  சந்திரசேகர் உள்பட கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
 தெற்கு  பாப்பான்குளத்தில் பஞ். தலைவர் இசக்கி முத்து தலைமையில் நடந்தது. யூனியன் ஆர்ஐ ஆதி  நாகேஷ்வரி முன்னிலை வகித்தார். உறுப்பினர்கள் சிதம்பரநாதன், சேகர், வேம்பு,  முத்துக்குமார், மெர்லின், சீதாலட்சுமி, செயலர் சந்திரசேகர் உள்பட  பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

சாட்டுப்பத்து ஊராட்சியில் நடந்த   கூட்டத்திற்கு தலைவர் சாரதா சுப்பிரமணியன் தலைமை வகித்தார். துணைத்தலைவர்  முருகன், உறுப்பினர்கள் திரிபுர சுந்தரி, லதா, நாகராஜ், லெஷ்மி, செயலர் ரவி  உள்பட பலர் கலந்து கொண்டனர். வெள்ளங்குளியில் பஞ்.தலைவர் முருகன்  தலைமையில் நடந்த  கூட்டத்தில் துணைத்தலைவர் ராஜேஷ், விஏஓ குத்தாலிங்கம்,  யூனியன் ஓவர்சீயர் ஜெயந்தி, வேளாண் அலுவலர் விஜயலட்சுமி  முன்னிலை  வகித்தனர், பஞ்.உறுப்பினர்கள் முத்துலட்சுமி, கவிதா, மகாலெட்சுமி,  முத்துலட்சுமி, சொர்ணலட்சுமி, தங்கம், மாரியப்பன்,செயலர் பிரசன்னா, உரக்கடை  கண்ணன் உள்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 அம்பை ஒன்றியத்திற்கு உட்பட்ட சிவந்திபுரம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் கஸ்பா கல்யாணி துறையில் ஊராட்சி தலைவர் ஜெகன் தலைமையில் நடந்தது. கூட்டத்திற்கு அம்பை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயசெல்வி மற்றும் ஒன்றிய பணி மேற்பார்வையாளர் உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகள் குறித்து தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டு 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்களை ஊராட்சி எழுத்தர் வேலு வாசித்தார். இதில் வேளாண்மை துறை சார்பாக 10 விவசாயிகளுக்கு கிசான் கடன் அட்டையை வழங்கி, வேளாண்மைத் துறையில் விவசாயிகளுக்கு ஏற்படும் நன்மைகள் பற்றியும் வேளாண்மைத்துறை உதவி அலுவலர் சாந்தி பேசினார். மாவட்ட கவுன்சிலர் அருண் தபசுபாண்டியன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், இஸ்ரவேல், முத்துலட்சுமி, முருகேஸ்வரி, நெடுஞ்செழியன், பேபி நிஷா, சுப்புலட்சுமி, முருகன் ஆகிய உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி சுகாதார மேஸ்திரி பெல்பின், பில் கலெக்டர் முத்துக்குட்டி ஆகியோர் கலந்துகொண்டனர். துணைத்தலைவர் பாக்கியலட்சுமி நன்றி கூறினார்.

 அடையக்கருங்குளம் ஊராட்சியில் பஞ்சாயத்து ராஜ் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. பஞ்சாயத்து தலைவர் ராஜேஸ்வரி தலைமை வகித்தார். துணைத்தலைவர் மதன கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக சுகாதாரப்பணியாளர்களை அதிக அளவு நியமிப்பது மற்றும் ஊராட்சியில் சிறுவர் பூங்கா அமைப்பது பொதுக்கழிப்பிடம் அமைப்பது அதிக அளவுகளில் மின்விளக்குகள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் வட்டார துணை மண்டல மேலாளர் சத்தியவாணிமுத்து, வார்டு உறுப்பினர்கள் அன்னம், பூதலிங்கம், சீதா, கண்ணம்மாள், கணேசமூர்த்தி, ராணி, ரமேஷ், கனகா மற்றும் ஊராட்சி எழுத்தர் சுரேகா, மகளிர் சுய உதவி குழுக்கள், தோட்டக்கலை துறை பார்த்திபன், அங்கன்வாடி பணியாளர்கள், மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 களக்காடு அருகே உள்ள கீழக்காடுவெட்டி பஞ்சாயத்து கிராம சபைக் கூட்டம் தலைவர் ஜெயசீலி அப்பாத்துரை தலைமையில் நடந்தது. துணை தலைவர் செல்லப்பாண்டி, பஞ்சாயத்து செயலாளர் ஐயப்பன் முன்னிலை வகித்தனர். இதில் உறுப்பினர்கள் எல்சிபாய், முத்துலெட்சுமி, ஏசுபாதம், ஆண்ட்ரூஸ் ஜெபர்சன், பாலாலெட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பஞ்சாயத்து பகுதிகளில் செயல்படுத்தப்பட வேண்டிய வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

கீழப்பாவூர் ஒன்றியம் மேலப்பாவூர் ஊராட்சியில் சிறப்பு கிராம சபைகூட்டம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் சொள்ளமுத்து மருதையா தலைமை வகித்தார். ஊர் நல அலுவலர் முத்துசெல்வி, குழந்தைகள் வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர் பியூலா, உதவி வேளாண்மை அலுவலர் மாரியம்மாள், உதவி கால்நடை மருத்துவர் ரமாதேவி, கவுன்சிலர்கள் கொம்மையா, பிரேமா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில்நீடித்த நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் குறித்து விவாதிக்கப்பட்டது. ஊராட்சி செயலர் சாமிதுரை நன்றி கூறினார். மசபை கூட்டம் தலைவர் சொள்ளமுத்து மருதையா தலைமையில் நடந்தது.

கூடங்குளம் அருகே உள்ள தனக்கர்குளத்தில் கிராம சபை கூட்டம் நடந்தது. பஞ்சாயத்து தலைவர் சுயம்புலிங்கதுரை தலைமை வகித்தார். கூட்டத்தில் மத்திய அரசு திட்டங்கள் பற்றியும் மாநில அரசு திட்டங்கள் பற்றியும் விளக்கமாக விவாதம் செய்யப்பட்டது. கிராம நிர்வாக அலுவலர் விஜய் முதியோர், ஊனமுற்றோருக்கான உதவித்தொகை, ஆதரவற்றோருக்கான உதவி தொகை, முதலமைச்சரின் உழவர் காப்பீட்டு திட்டம் பற்றி மக்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார். இக்கூட்டத்தில் கூடங்குளம் அணுமின் திட்டத்தில் சுற்றுப்புற இளைஞர்களுக்கு வேலை வழங்கப்படும், இலவச வீட்டு மனை அனைவருக்கும் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் என பஞ். தலைவர் உறுதி கூறினார். கூட்டத்தில் துணை பஞ்சாயத்து தலைவர், சுகாதாரத்துறை, வேளாண் துறை , அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

நாங்குநேரி ஒன்றியத்தில் தெற்கு நாங்குநேரி இறைப்புவாரி, மறுகால்குறிச்சி ராமகிருஷ்ணாபுரம் பாப்பாங்குளம் சிங்கநேரி ஆழ்வார்நேரி பூலம், தளபதிசமுத்திரம் ராஜக்கள்மங்கலம் உன்னங்குளம், அ.சாத்தான்குளம், அரியகுளம் கரந்தாநேரி, இலங்குளம் கூந்தன்குளம், முனைஞ்சிபட்டி விஜயநாராயணம், சங்கனாங்குளம், வெங்கட்ராயபுரம், சிந்தாமணி, காடன்குளம், உள்ளிட்ட அனைத்து ஊராட்சி மன்றங்களிலும் கிராமசபைக் கூட்டங்கள் நடந்தன.  அந்தந்த ஊராட்சி தலைவர்கள், துணைத்தலைவர்கள் தலைமையில் நடந்த கிராமசபை கூட்டத்தில் கவுன்சிலர்கள், சிறப்பு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

 தெற்கு நாங்குநேரியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் தெற்கு நாங்குநேரி ஊராட்சி தலைவர் சகுந்தலாபாபு, இறைப்புவாரியில் மோகனா யோசுவா , கரந்தாநேரியில் செந்தில், மறுகால்குறிச்சி சாந்தகுமாரி செல்லையா, பாப்பான்குளம் முருகன், பூலம் முத்துச்செல்வி முத்துராஜ், ஆழ்வார்நேரி சீனிதாஸ், தோட்டாக்குடி அப்பாத்துரை, சிங்கநேரி முத்து சொர்ணம் சண்முகசுந்தரம், அரியகுளம் சுப்புலட்சுமி வசந்தகுமார் பருத்திபாடு ஊசி காட்டான் உள்ளிட்ட அனைத்து ஊராட்சி தலைவர்களும் கிராம சபைக்கூட்ட தீர்மானங்களை அரசுக்கு எடுத்துரைத்து செயல்படுத்துவதாக உறுதியளித்தனர்.

Tags : Tenkasi ,Nellai , Tenkasi: Tenkasi Panchayat Union National Panchayat Raj Day Special Grama Niladhari Meeting at Kuthukkalvalasa Collector
× RELATED தென்காசி மாவட்டம் மைப்பாறை அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து