×

பல்கலை. துணைவேந்தர் மசோதாவுக்கு பல்வேறு கட்சிகள் ஆதரவு..மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்வர்கள் பல்கலை. வேந்தராக இருக்க வேண்டும்..வேல்முருகன்

சென்னை: பல்கலைக்கழக துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்த பல்கலை. துணைவேந்தர் மசோதாவுக்கு பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளது. தமிழக வாழ்வுரிமை கட்சி, கொ.ம.தே.க, மதிமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் தங்களின் ஆதரவை தெரிவித்தது. அதாவது,

கடந்த 4 ஆண்டுகளில் நியமிக்கப்பட்ட துணைவேந்தர்கள் அனைவரையும் மாற்ற சட்டப்பேரவையில் வி.சி.க. வலியுறுத்தியுள்ளது. 4 ஆண்டில் ஆளுநரின் பின்னால் இருந்து இயக்கும் ஒன்றிய அரசு, தமிழக கல்வி முறையின் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. பல்கலைக்கழக துணைவேந்தர்களை அரசு நியமிக்க முடியாமல் இருப்பது உயர்கல்வியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என விசிக சட்டப்பேரவை குழு தலைவர் சிந்தனை செல்வன் கூறியுள்ளார்.

துணைவேந்தர் நியமன மசோதாவுக்கு சட்டப்பேரவையில் தமிழக வாழ்வுரிமை கட்சி வரவேற்பு தெரிவித்திருக்கிறது என வேல்முருகன் கூறியுள்ளார். தமிழ்நாட்டை சாராத ஒருவரை கடந்த ஆட்சியில் துணைவேந்தராக நியமித்தது போன்ற செயல்களுக்கு புதிய மசோதா முடிவுக்கட்டும். மேலும் பல்கலைக்கழக துணைவேந்தராக ஆளுநர் இருக்கக்கூடாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் தான் பல்கலைக்கழகங்களின் வேந்தராக இருக்க வேண்டும் என வேல்முருகன் தெரிவித்துள்ளார்.  

* துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசு வசமே இருக்க வேண்டும்..ஜவாஹிருல்லா

* துணைவேந்தர்களை நியமிப்பது போலவே, ஆளுநரையும் மாநில அரசே பரிந்துரைக்க வேண்டும். தமிழக அரசு பரிந்துரைக்கு 3 பேரில் ஒருவரை ஆளுநர்களாக நியமிக்கவேண்டும்...ஈஸ்வரன்

* பல்கலைக்கழகம் என்பது ஒரு மாநில பொருளாதார வளர்ச்சியின் அங்கமாக உள்ளது...ஜி.கே.மணி


Tags : Bill ,Velmurugan , University. Various parties support the Vice Chancellor's bill. Must be Vendar..Velmurugan
× RELATED தாய்லாந்தில் ஒரே பாலின...