பெரம்பலூர் அருகே சென்டர்மீடியனில் மோதி கார் கவிழ்ந்து அரசு அதிகாரி மனைவி, மாமியார் பலி: சென்னை வந்தபோது பரிதாபம்

பெரம்பலூர்: திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (42). திண்டுக்கல் மாவட்ட வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி லதா (40). இவர் வாலிபால் பயிற்சியாளராக இருந்தார். இவர்கள், லதாவின் தாயார், திருவாரூர் மாவட்டம், இடை மேலையூரை சேர்ந்த செளந்தர்ராஜன் மனைவி வேம்பு (64). லதாவின் அண்ணன் ராமச்சந்திரன் (44), கமலக்கண்ணனின் சித்தி கோவையை சேர்ந்த மணிமேகலை (65) ஆகியோருடன் திண்டுக்கல்லில் இருந்து, சென்னை அருகே சீரடி சாய்பாபா கோயிலுக்கு சாமி கும்பிட செல்வதற்காக, நேற்று முன்தினம் நள்ளிரவு டாடா சபாரி காரில் புறப்பட்டனர்.

காரை கமலக்கண்ணன் ஓட்டினார். நேற்று அதிகாலை 4.45 மணிக்கு திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாடாலூர் அருகே விஜயகோபாலபுரம் என்ற இடத்தில் சென்றபோது,  கமலக்கண்ணனின் கட்டுப்பாட்டை இழந்து கார் தறிகெட்டு ஓடி, சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்தது. இதில் கமலக்கண்ணன், அவரது மனைவி லதா, லதாவின் தாய் வேம்பு ஆகிய மூவரும் காருக்குள்ளேயே உடல் நசுங்கி பலியானார்கள். உயிருக்கு போராடிய ராமச்சந்திரன், மணிமேகலை ஆகியோரை அப்பகுதியினர் மீட்டு பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories: