×

கோவையில் காரில் ரூ.28.35 லட்சத்துடன் சிக்கிய போக்குவரத்து இணை கமிஷனருக்கு பல ேகாடி ரூபாய் சொத்து?: பத்திரம், ஆவணங்கள் சேகரிப்பு

கோவை, ஏப்.25: கோவை சரக போக்குவரத்து இணை கமிஷனராக உள்ளவர் உமா சக்தி. சவுரிபாளையம் ரோடு கிருஷ்ணா வீதியில் இவர் தனது காரில் சென்று கொண்டிருந்த போது கோவை லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்து, ₹28.35 லட்சத்ைத பறிமுதல் செய்தனர். இவரது கட்டுப்பாட்டில் உள்ள கோவை, நீலகிரி திருப்பூர் மாவட்ட, வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகங்கள், மாவட்ட, மாநில எல்லை செக்போஸ்ட்களுக்கு ஆய்வு பணிக்கு சென்றவர் லஞ்சம் ெபற்றிருப்பதாக கூறப்படுகிறது. ஓய்வு பெற்ற வட்டார போக்குவரத்து அலுவலக உதவியாளர் செல்வராஜ் மூலமாக பணம் வசூலித்து அதை காரில் வீட்டிற்கு கொண்டு சென்ற போதுதான் சிக்கியுள்ளார். இது தொடர்பாக, போலீசார் உமா சக்தி, செல்வராஜ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

போலீசார்  இவரது அலுவலகம் மற்றும் வீட்டில் போலீசார் சோதனை நடத்திய போது பல்வேறு சொத்து பத்திரங்கள், ஆவணங்கள் கிடைத்தது. பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் இணை கமிஷனர் உமா சக்தி மற்றும் அவரது குடும்பத்தினர் பெயரில் இருப்பதாக தெரிகிறது. இந்த ஆவணங்களை வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், போக்குவரத்து துறை ஆணையர் மற்றும் செயலாளர் அலுவலக அதிகாரிகள் உமா சக்தியின் வசூல் தொடர்பாக துறை ரீதியாக விசாரிக்கின்றனர்.

விரைவில் இவர் சஸ்பெண்ட் செய்யப்படுவார் என கூறப்படுகிறது. இவருக்கு பணம் கொடுத்த வட்டார ேபாக்குவரத்து அதிகாரிகள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பற்றியும் புகார் பெறப்பட்டுள்ளது. இவர்களிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.  வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் வரி, லைசென்ஸ், எப்.சி போன்றவற்றுக்கும், மோட்டார் வாகனங்களுக்கு இழப்பீடு ெதாடர்பான அனுமதிக்கும் லஞ்சம் பெறப்பட்டு வருவதாக தெரிகிறது. ரத்து அலுவலர்கள் பங்கு இந்த முறைகேட்டில்  அதிகாரி சிக்கியதால், கீழ் மட்ட அலுவலர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

Tags : Joint ,of ,Transport ,Coimbatore , 28.35 lakh in a car in Coimbatore with assets worth crores of rupees to the Joint Commissioner of Transport ?: Deed, collection of documents
× RELATED உரங்களில் கலப்படம் செய்தால் உரிமம் ரத்து அதிகாரி எச்சரிக்கை