மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு: ஆவடி கமிஷனர் துவக்கி வைத்தார்

சென்னை: அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சாலை போக்குவரத்து காவலர்கள் நடத்திய மாணவர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆவடி மாநகர சுற்றுவட்டாரத்தில் செயல்பட்டு வரும் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்கள் சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில் சிறப்பு விருந்தினராக ஆவடி காவல் மாநகர ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் மற்றும் ஆவடி மாநகர துணை ஆணையர் விஜயகுமாரி மற்றும் போக்குவரத்து காவலர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு, போக்குவரத்து விதிமுறைகளை மீறாமல் பாதுகாப்பாக பயணிக்க வேண்டும் என்று ஆலோசனைகள் வழங்கினர்.மேலும்,  மாணவர்கள், பெற்றோர்களுடன் வாகனத்தில் செல்லும்போது தலைக்கவசம் அணிந்து செல்லவேண்டும் என அறிவுரை வழங்கினார்.

Related Stories: