×

போர்ஷே கிராண்ட் பிரீ ஸ்வியாடெக் சாம்பியன்

ஸ்டுட்காட்: போர்ஷே கிராண்ட் பிரீ டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், நம்பர் 1 வீராங்கனை இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்காவுடன் (23 வயது, 4வது ரேங்க்) நேற்று மோதிய ஸ்வியாடெக் (20 வயது, போலந்து) அதிரடியாக விளையாடி 6-2, 6-2 என்ற நேர் செட்களில் எளிதாக வென்றார். இப்போட்டி 1 மணி, 24 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது. கோப்பையுடன் விலை உயர்ந்த போர்ஷே காரையும் பரிசாகப் பெற்ற ஸ்வியாடெக், நடப்பு சீசனில் தொடர்ச்சியாக 4வது தொடரில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. கடைசியாக விளையாடிய 7 பைனலிலும் அவர் நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தி உள்ளார்.


Tags : Porsche ,Grand Prix SwiTech , Porsche Grand Prix SwiTech Champion
× RELATED சில்லி பாய்ன்ட்…