மும்பை இந்தியன்சுக்கு எதிராக கே.எல்.ராகுல் அபார சதம்

மும்பை: மும்பை இந்தியன்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணி கேப்டன் கே.எல்.ராகுல் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். வாங்கடே மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்துவீசியது. டி காக், ராகுல் இருவரும் லக்னோ இன்னிங்சை தொடங்கினர். டி காக் 10 ரன் எடுத்து பும்ரா வேகத்தில் ரோகித் வசம் பிடிபட்டார். அடுத்து மணிஷ் பாண்டே பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, ராகுல் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார்.

இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 58 ரன் சேர்த்தது. மணிஷ் 22 ரன் (22 பந்து, 1 சிக்சர்) எடுத்து போலார்டு பந்துவீச்சில் மெரிடித்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஒரு முனையில் ராகுல் அதிரடியைத் தொடர, மார்கஸ் ஸ்டாய்னிஸ் (0), க்ருணல் பாண்டியா (1) அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். தீபக் ஹூடா 10 ரன்னில் வெளியேறினார். தனி ஒருவனாக தாக்குதலை முன்னெடுத்த ராகுல் நடப்பு சீசனில் தனது 2வது சதத்தை பதிவு செய்து அசத்தினார்.

ஆயுஷ் பதோனி 14 ரன் (11 பந்து, 1 சிக்சர்) எடுத்து மெரிடித் பந்துவீச்சில் போலார்டு வசம் பிடிபட்டார். லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன் குவித்தது. கேப்டன் கே.எல்.ராகுல் 103 ரன் (62 பந்து, 12 பவுண்டரி, 4 சிக்சர்), ஜேசன் ஹோல்டர் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். மும்பை பந்துவீச்சில் ரைலி மெரிடித், கெய்ரன் போலார்டு தலா 2, பும்ரா, சாம்ஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 169 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் களமிறங்கியது. இஷான் கிஷன், கேப்டன் ரோகித் ஷர்மா இருவரும் துரத்தலை தொடங்கினர்.

Related Stories: