×

அகமதாபாத்தில் ஐபிஎல் பைனல்

நடப்பு ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்று கொல்கத்தா மற்றும் அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. பைனலுக்கான முதல் குவாலிபயர் போட்டி ஈடன்கார்டனில் மே 24, எலிமினேட்டர் போட்டி 25ம் தேதியும் நடக்கிறது. குவாலிபயர் -2 மே 27, பைனல் 29ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. மகளிருக்கான சேலஞ்சர் கோப்பை போட்டி மே 24-28 வரை லக்னோவில் நடைபெற உள்ளது.

மேலும் தென்ஆப்ரிக்கா ஆடவர் அணி இந்தியாவுக்கு எதிராக ஜூன் 9, 12, 14, 17, 19 ஆகிய தேதிகள் விளையாடும் 5 டி20 போட்டிகள் முறையே டெல்லி, கட்டாக், விசாகப்பட்டினம், ராஜ்கோட் மற்றும் பெங்களூருவில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : IPL ,Ahmedabad , IPL final in Ahmedabad
× RELATED ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 32-வது லீக்...