×

லக்னோவுடன் இன்று மோதல்: 8வது போட்டியிலாவது மும்பைக்கு வெற்றி கிட்டுமா?

மும்பை:ஐபிஎல் டி20 தொடரின் 36வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி அறிமுக அணியான லக்னோவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. மும்பையை பொறுத்தவரை கேப்டன் ரோஹித், இஷான்கிசன் ஆகியோர் துவக்கத்திலேயே விக்கெட்டை இழப்பது அணிக்கு பலவீனமாகிறது. சூர்யகுமார் யாதவ் மட்டுமே நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

திலக்வர்மாவும் பரவாயில்லை. மற்றவர்கள் சோபிக்கவில்லை. பந்துவீச்சிலும் பும்ரா மட்டுமே கைகொடுக்கிறார். ஒட்டுமொத்த அணியும் ஒருங்கிணைந்து உத்வேகத்துடன் ஆடினால்தான் 7 தோல்விகளுக்கு பின்னர் இன்று நடக்கும் 8வது போட்டியிலாவது வெற்றி கிட்டும். லக்னோ ஜெயன்ட்சை பொறுத்தவரையில் கேப்டன் ராகுல் தனது பங்கை சிறப்பாக செய்து வருகிறார். 7 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் லக்னோ அணி புள்ளி பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது.

டிகாக், தீபக்ஹுடா, குர்னல்பாண்டியா, ஆயுஷ்படோனி பேட்டிங்கில் வலு சேர்க்கின்றனர். இதுபோல் ஆவேஷ்கான், ரவி பிஷ்னோய், ஜேசன்கோல்டர் பந்துவீச்சில் பலம் சேர்க்கின்றனர். லக்னோ 5வது வெற்றியை பெறும் முயற்சியிலும் மும்பை முதல் வெற்றியை எட்டும் முயற்சியிலும் இன்று வரிந்துகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இன்றைய ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.


Tags : Lucknow ,Mumbai , Today's clash with Lucknow: Will Mumbai win the 8th match?
× RELATED சில்லி பாயின்ட்…