தமிழகத்தில் இருமொழி கொள்கை மட்டுமே செயல்படுத்தப்படும்: பள்ளி கல்வித்துறை ஆணையர் தகவல்

சென்னை: தமிழகத்தில் இருமொழி கொள்கை மட்டுமே செயல்படுத்தப்படும் பள்ளி கல்வி ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார். 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வருகிற மாதம் நடைபெறவுள்ளது. இதற்கான கால அட்டவணையில் மூன்றாவதாக விருப்பமொழி என்ற தேர்வு கொடுக்கப்பட்டது.

இது எதற்காக கொடுக்கப்பட்டது என்றால், தமிழை தாய்மொழியாக கொள்ளாத மாணவர்களுக்காக தான் இந்த விருப்பமொழி தேர்வு கொடுக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருவதாக பள்ளி கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விளக்கமளித்துள்ள அவர்,  தமிழகத்தில் இருமொழிக்கொள்கை மட்டுமே தொடர்ந்து செயல்படுத்தப்படும். தாயமொழி தமிழ், இணைப்பு மொழியாக ஆங்கிலம் என இருமொழிக் கொள்கை மட்டுமே வழக்கத்தில் உள்ளது.

ஒவ்வொரு மாணவரும் 10-ஆம் வகுப்புவரை தமிழை கட்டாய பாடமாக கற்க சட்டப்படி வழிவகை செய்யப்பட்டுள்ளது. தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது மாணவர்கள், தமிழுடன் தாய்மொழியை விருப்பப்படமாக தேர்வு எழுதும் முறை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. மொழி படக் கொள்கை குறித்த உண்மைக்கு புறம்பாக தவறாக வழிநடத்தும் செய்திகளை நம்பவேண்டாம் என்றும் பள்ளிக்கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார்.

Related Stories: