பிரதமர் மோடி சென்றுள்ள நிலையில் ஜம்மு பகுதியில் குண்டுவெடிப்பு

காஷ்மீர்: காஷ்மீரில் பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு சில கிலோ மீட்டர் தொலைவில் வெடிகுண்டு வெடித்ததால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் இன்று பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் ஜம்மு - காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டத்தில் உள்ள பள்ளி பஞ்சாயத்து பகுதியில் இன்று நடைபெறும் பஞ்சாயத்து ராஜ் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றுகிறார். இதற்காக, பிரதமர் மோடி இன்று ஜம்மு காஷ்மீர் சென்றுள்ளார்.

இந்நிலையில், ஜம்மு அடுத்த பிஷ்னா பகுதியில் உள்ள லாலியன் கிராமத்தில் விவசாய நிலத்தில் வெடிகுண்டு வெடித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த தகவலை கிராமவாசிகள் சிலர் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, சம்பாவில் உள்ள பள்ளி கிராமத்தில் பிரதமர் உரையாற்றும் இடத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளன. இது குறித்து  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காஷ்மீரில் பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் இருந்து 12 கிலோமீட்டர் தூரத்தில் குண்டுவெடித்தபதற்றம் நிலவி வருகிறது.

Related Stories: