கோடை விழா; காய்கறி கண்காட்சிக்கு தயாராகும் கோத்தகிரி நேரு பூங்கா

கோத்தகிரி: கோடை விழாவிற்காக நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் தயார் செய்யப்பட்டு வருகிறது. அதேபோல கோத்தகிரி நேரு பூங்காவும், கோத்தகிரி பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன் தலைமையில் வர்ணம் பூசுதல், சுற்றுச்சுவர் அமைத்தல், மலர் நாற்றுகள் நடுவு, புல்தரைகளுக்கு தண்ணீர் பாய்ச்சப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

அது மட்டுமின்றி பூங்காவை சுற்றிலும் தடுப்புச்சுவர் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. கோடை விழாவின் தொடக்க விழாவான காய்கறி கண்காட்சி கொரோனா ஊரடங்கால் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த நிலையில், இந்த ஆண்டு நடைபெறும் காய்கறி கண்காட்சி சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி சுற்றுலா ஆர்வலர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: