×

டி.புதுப்பட்டி அருகே விருச்சிப்பூ விளைச்சல் ஜோரு: விவசாயிகள் ‘குஷி’

சின்னாளபட்டி: டி.புதுப்பட்டி அருகே விருச்சிப்பூ விளைச்சல் அமோகமாக உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பூ வகைகளில் விருச்சி செடியின் பூ, இலைகள் மற்றும் வேர்களில் மருத்துவ குணங்கள் அதிகளவில் உள்ளன. இவை வெட்சிப்பூ மற்றும் இட்லி பூ என்றும் அழைக்கப்படுகிறது. நெஞ்சில் உள்ள சளியை கரைத்து வெளியேற்ற உதவுவதுடன், ரத்தம் கலந்து வெளியேறும் சளி பிரச்னையையும் தீர்க்க கூடியவை இந்த பூச்செடிகள். இதனால் தற்போது வீடுகளில் இந்த பூச்செடிகளை அதிகளவில் வளர்க்க பொதுமக்கள் விரும்புகின்றனர்.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி அருகே டி.புதுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தோட்டங்களில் இந்த பூ செடிகளை அதிகளவில் பயிரிட்டுள்ளனர். தற்போது செடிகளில் பூக்கள் பூத்து குலுங்குகின்றன. இதனையடுத்து தினமும் பூக்களை பறித்து, பூ மார்க்கெட்டிற்கு அனுப்பி வைக்கின்றனர். பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ வெட்சிப்பூ ரூ.50 முதல் 60 வரை விற்கப்படுகிறது. இதுகுறித்து டி.புதுப்பட்டியை சேர்ந்த பூ விவசாயி கூறுகையில், ‘‘முன்பு விருச்சிப்பூவின் மருத்துவ குணங்கள் குறித்து பொதுமக்களுக்கு தெரியாமல் இருந்தது. பூஜைகளுக்கும் பயன்படுவதால், தற்போது இந்த பூக்களை பொதுமக்கள் அதிகளவில் வாங்கிச் செல்கின்றனர்’’ என்றார்.

Tags : Scorpion ,D. Pudupatti , D. Pudupatti, Scorpion, Yield
× RELATED மகாராஷ்டிராவில் ரூ.5 கோடி ஜிஎஸ்டி மோசடி