×

நீலகிரி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யபடும் மது பாட்டிலுக்கும் ரூ.10 கூடுதல் வசூல்: காலி பாட்டிலை கொடுத்து விட்டு திரும்பப்பெற உத்தரவு

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யபடும் ஒவ்வொரு மது பாட்டிலுக்கும் 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்கபடும். காலி மதுபாட்டில்களை திரும்ப கொடுத்து அந்த 10 ரூபாயை திரும்ப பெற்று கொள்ளுமாறு  தமிழக அரசு அறிவித்துள்ளது.

மலை பிரதேசங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகள் வன பகுதிகளில் காலி மதுபாட்டில்களை வீசி செல்வதால் சுற்றுசூழல் மாசுபடுவதுடன் வனவிலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படுவதாகவும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் அதற்கு மாற்று ஏற்பாடுகளை செய்யுமாறும் தமிழக அரசுக்கு சென்னை  உயர் நீதிமன்ற அமர்வுவலியுறுத்திருந்தது.

நீலகிரி உள்ளிட்ட மலை மாவட்டங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகள் காலி மது பாட்டில்களை வன பகுதிகளில் வீசுவதால் சுற்று சூழல் மற்றும் வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுவதால் மலை பிரதேசங்களில் உள்ள மதுபான கடைகளை மூடுமாறு உத்தரவிட வேண்டி நிலை ஏற்படும் என சென்னை உயர் நீதிமன்றம் கடந்த சில தினங்களுக்கு முன்பு எச்சரிக்கைவிடுத்தது. குறிப்பாக ஏப்ரல் 25-ஆம் தேதிக்குள் மாற்று நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றமே அவற்றை மூட உத்தரவிட வேண்டிய நிலை வரும் என்று நீதிபதிகள் கூறியிருந்தனர்.

இதனையடுத்து மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மதுபான கடைகளில் விற்பனை செய்யபடும் ஒவ்வொரு மது பாட்டிலுக்கும் அடையாளமாக சீல் வைப்பதுடன் 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மதுபாட்டில்களை வாங்கி செல்பவர்கள் காலி மதுபாட்டிலை கொடுத்து அந்த 10 ரூபாயை திரும்ப பெற்றுகொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கான உத்தரவை தமிழ்நாடு கூடுதல் தலைமை செயலாளர் பிரபாகரன் தமிழக டாஸ்மார்க் மேலாண்மை இயக்குனருக்கு அனுப்பியதுடன் ஏற்பாடுகளை உடனடியாக செய்யுமாறும் உத்தரவிட்டுள்ளார்.


Tags : Tasmag ,Nilagiri , Tasmac Store, Madhupattil, Government of Tamil Nadu, Chennai high court
× RELATED நீலகிரியில் மழை குறைந்ததால் மைக்ரோ...