டெல்லி கலவரம் பற்றி தவறான செய்தி தனியார் டிவி.க்களுக்கு ஒன்றிய அரசு எச்சரிக்கை

புதுடெல்லி: டெல்லி கலவரம், ரஷ்யா-உக்ரைன் போர் செய்திகளை திரித்து வெளியிடும் தனியார் டிவி சேனல்களுக்கு ஒன்றிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. டெல்லியில் உள்ள ஜஹாங்கீபுரியில் சமீபத்தில் நடந்த அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த செய்திகள் தொடர்பாகவும், ரஷ்யா-உக்ரைன் போரில் ஒன்றிய அரசு எடுத்துள்ள நிலைபாடு குறித்தும் தனியார் டிவி சேனல்களில் விவாதங்கள் நடத்தப்படுகின்றன. செய்திகளும் வெளியிடப்படுகின்றன. இவற்றில் உண்மை கருத்துகள் தவறாக சித்தரிக்கப்படுவதாகவும் , தலைப்புகள் மக்களிடையே வன்முறையை தூண்டும் வகையில் இருப்பதாகவும் ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் கண்டித்துள்ளது. இது தொடர்பாக, இந்த டிவி சேனல்களுக்கு எச்சரிக்கை நோட்டீசும் அனுப்பி இருக்கிறது.

Related Stories: