முதல்வர் வீடு முன் அனுமன் சாலிசா வாசிப்போம் என மிரட்டிய எம்எல்ஏ ரவி ராணா மனைவியுடன் கைது

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் பட்னேரா தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ.ரவி ராணா, மனைவியும் சுயேச்சை எம்.பி.யுமான நவ்நீத் கவுருடன் மும்பையில் உள்ள முதல்வர் இல்லமான மாதோ ஸ்ரீ முன் அனுமன் சாலிசா வாசிக்கப் போவதாக தெரிவித்திருந்தார். இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை மீண்டும் முதல்வர் வீட்டின் முன் சனிக்கிழமை அனுமன் சாலிசா வாசிப்பது உறுதி என்று ராணா தெரிவித்திருந்தார். அதே நாளில் போலீசார் ராணா தம்பதிக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பினர். அதில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் நடவடிக்கையை தவிர்க்குமாறு அறிவுறுத்தியிருந்தனர். இந்நிலையில் முதல்வர் வீட்டின் முன் அனுமன் சாலிசா வாசிக்கும் திட்டத்தை கைவிட்டுவிட்டதாக எம்.எல்.ஏ. ராணா நேற்று தெரிவித்தார். அனுமன் சாலிசா வாசிக்கும் திட்டம் கைவிடப்பட்டுவிட்டதாக ராணா அறிவித்த பின்னர் போலீசார் அவருடைய வீட்டுக்குள் சென்று நவ்நீத் கவுர் எம்.பி.யையும் எம்எல்ஏ ரவி ராணாவையும் கைது செய்தனர்.

Related Stories: