கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவக்கி வைத்தார்

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமை  அமைச்சர் தா.மோ.அன்பரசன், எம்பி டி.ஆர்.பாலு ஆகியோர் துவக்கி வைத்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் மொளச்சூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தமிழக அரசு சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடந்தது. கலெக்டர் ஆர்த்தி தலைமை வகித்தார். எம்எல்ஏ செல்வபெருந்தகை, மாவட்ட குழு தலைவர் மனோகரன், ஒன்றியக்குழு தலைவர் கருணாநிதி, ஒன்றிய செயலாளர் கோபால், மாவட்ட கவுன்சிலர்கள் பாலா, ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், எம்பி டி.ஆர்.பாலு ஆகியோர் கலந்து கொண்டு முகாமை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து பார்வையிட்டனர்.

இதில் பொது மருத்துவம், குழந்தைகள் நலம், மகப்பேறு, இதயம், மனநலம், நரம்பியல் உள்பட 16 வகை மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்பட 28 வகை நோய்களுக்கு பரிசோதனைகள் நடத்தபட்டன. இதில் ஏராளமான பொது மக்களுக்கு சிகிச்சை மற்றும் பரிசோதனை செய்யபட்டது. மேலும், முகாமில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் பல்வேறு கண்காட்சிகள் வைக்கப்பட்டு இருந்தன. சுகாதார பணிகள் துணை இயக்குனர் பிரியாராஜ், மாவட்ட துணை அமைப்பாளர்கள் பொடவூர் ரவி, செந்தில்தேவராஜன், முருகன், ஜார்ஜ் பெரும்புதூர் பேராட்சி தலைவர் சாந்தி சதிஷ்குமார், துணை தலைவர் இந்திராணி சுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: