பராமரிப்பு பணி காரணமாக சென்ட்ரல் - திருவள்ளூர் மின்சார ரயில்கள் ரத்து

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக சென்ட்ரல் - திருவள்ளூர் இடையே சில மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு வெளியிட்ட அறிக்கை: சென்னை சென்ட்ரல் - திருவள்ளூர் இடையே இன்று இரவு 9.40 மணிக்கும், திருவள்ளூர் - ஆவடி இடையே இரவு 10.10 மணிக்கும், பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் - ஆவடி இடையே இரவு 11.55 மணிக்கும், பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் - சென்ட்ரல் இடையே இரவு 10.45 மணிக்கும் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

சென்ட்ரல் - பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இடையே அதிகாலை 4.15 மணிக்கும், பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் - சென்ட்ரல் இடையே அதிகாலை 3.20 மணிக்கும் இயக்கப்படும் மின்சார ரயில்கள் நாளை ரத்து செய்யப்படுகிறது.

சென்ட்ரல் - பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இடையே இரவு 10.35 மணிக்கும், சென்னை கடற்கரை - பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இடையே இரவு 11.15 மணிக்கும் இயக்கப்படும் மின்சார ரயில்கள் இன்று, ஆவடி- பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. சென்ட்ரல் - அரக்கோணம் இடையே இரவு 10.05, 10.45 மணிக்கும், சென்ட்ரல் - திருவள்ளூர் இடையே இரவு 11.15 மணிக்கும், அரக்கோணம் - சென்ட்ரல் இடையே இரவு 9.50 மணிக்கும், திருத்தணி - சென்ட்ரல் இடையே இரவு 9.45 மணிக்கும், இயக்கப்படும் மின்சார ரயில்கள் இன்று, பட்டாபிராம் மற்றும் இந்து கல்லூரி நிறுத்தங்களில் நிற்காமல் ஆவடி, பட்டாபிராம் இடையே எக்ஸ்பிரஸ் வழித்தடத்தில் இயக்கப்படும்.

சென்ட்ரல் - திருத்தணி இடையே அதிகாலை 3.50 மணிக்கும், கடற்கரை - அரக்கோணம் இடையே அதிகாலை 4.15 மணிக்கும், சென்ட்ரல் - திருவள்ளூர் இடையே அதிகாலை 4.30 மணிக்கும், காலை 5 மணிக்கும், திருவள்ளூர் - சென்ட்ரல் இடையே அதிகாலை 3.50 மணிக்கும், அரக்கோணம் - சென்ட்ரல் இடையே அதிகாலை 3.45 மணிக்கும், அரக்கோணம் - வேளச்சேரி இடையே அதிகாலை 4 மணிக்கும் இயக்கப்படும் மின்சார ரயில்கள் நாளை, இந்து கல்லூரி மற்றும் பட்டாபிராம் நிறுத்தங்களில் நிற்காமல் பட்டாபிராம் - ஆவடி இடையே எக்ஸ்பிரஸ் வழித்தடத்தில் இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: