×

நில அபகரிப்பு வழக்கில் கைதான மாஜி அமைச்சர் ஜெயக்குமார் ஜாமீன் நிபந்தனையை தளர்த்தக்கோரி மனு: ஐகோர்ட்டில் நாளை விசாரணை

சென்னை: நில அபகரிப்பு வழக்கில் ஜாமீன் நிபந்தனையை தளர்த்தக் கோரி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். சென்னை துரைப்பாக்கதில் 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ்குமார் என்பவருக்கும் ஏற்பட்ட பிரச்னையில், தனது செல்வாக்கை பயன்படுத்தி அடியாட்கள் மூலம்  மிரட்டி, நிலத்தை அபகரித்து கொண்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் ஜெயக்குமாருக்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.

இதுதொடர்பான வழக்கில் கைதான ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம், இரு வாரங்களுக்கு திருச்சியில் தங்கியிருந்து, கன்டோன்மென்ட் போலீசில் கையெழுத்திட வேண்டும் என்றும், அதன் பின்னர் திங்கட்கிழமைதோறும் விசாரணை அதிகாரி முன்பு கையெழுத்திட வேண்டும் எனவும் நிபந்தனை விதித்தது. அதன்படி ஜாமீனில் வெளிவந்த ஜெயக்குமார் வாரந்தோறும் சென்னை மத்திய குற்றப்பிரிவில் ஆஜராகி வருகிறார். இந்த நிலையில் திங்கள்கிழமை தோறும் கையெழுதிட வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்த கோரி ஜெயக்குமார் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு நாளை விசாரணைக்கு வரவுள்ளது.

Tags : Former ,Jayakumar , Former minister Jayakumar's bail in land grab case: Petition seeking relaxation of bail
× RELATED ராயபுரத்தில் 25 ஆண்டு முடிசூடா மன்னனாக...