டீ விற்றவர் இப்போது நாட்டை விற்கிறார்: பிரகாஷ் ராஜ் கடும் தாக்கு

புதுடெல்லி: டீ விற்று வந்த நரேந்திர மோடி, இப்போது நாட்டையும் விற்று வருகிறார் என நடிகர் பிரகாஷ் ராஜ் சாடியுள்ளார். ஒன்றிய அரசுக்கு எதிராக துணிச்சலுடன் பல்வேறு கருத்துகளை கூறி வருகிறார் பிரகாஷ் ராஜ். கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜவுக்கு எதிராக கர்நாடக மாநிலத்தில் போட்டியிட்டார். விவசாயிகள் போராட்டத்தின்போதும் பிரதமர் மோடிக்கு எதிரான கருத்துகளை முன் வைத்தார். இந்த நிலையில், அவர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், ‘‘பிரதமர் மோடி தேநீர் விற்றதை நம்பியவர்கள், அவர் நாட்டையும் விற்றுக் கொண்டிருப்பதை நம்ப மறுக்கிறார்கள்’’ என பதிவிட்டுள்ளார்.

Related Stories: