திண்டுக்கல்லில் புனித வியாகுல அன்னை தேவாலய பாஸ்கு திருவிழா

திண்டுக்கல்: திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் உள்ள புனித வியாகுல அன்னை திருத்தலத்தில் பாஸ்கு திருவிழா நடைபெற்றது. இதில் பல்லாயிரகணக்கான இறைமக்கள் பங்கேற்றனர். திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் புனித வியாகுல அன்னை திருத்தலம் உள்ளது. ஆண்டுதோறும் ஈஸ்டர் திருவிழா முடிவடைந்து, மறு வாரத்தில் பாஸ்கு திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு 331ம் ஆண்டு பாஸ்கு திருவிழா, கடந்த 17ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கியது.

பாஸ்கு திருவிழா என்பது இயேசு கிறிஸ்து வாழ்க்கை வரலாற்றை தத்ரூபமாக நடித்து காண்பிக்கும் திருவிழாவாகும். இந்த திருவிழா தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறும். விழாவையொட்டி நேற்றிரவு புனித வியாகுல அன்னை திருத்தல பாஸ்கு மைதானத்தில் இரவு முதல் இன்று அதிகாலை வரை இயேசு கிறுஸ்துவின் அற்புதங்கள் மற்றும் சிலுவைபாடுகள் காட்சிகள் தத்ரூபமாக நடித்து காண்பிக்கபட்டன.

இதனைத்தொடர்ந்து இன்று அதிகாலை வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தூம்பாவில், இயேசு கிறிஸ்துவின் திருச்சடலம் பாஸ்கு மைதானத்திற்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தியும், இயேசு கிறுஸ்துவின் துதிப்பாடல்களை பாடியபடியும் சென்றனர். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சாதி, மத பேதமின்றி கலந்து கொண்டனர்.

Related Stories: