மருத்துவ சிகிச்சைக்காக கேரள முதல்வர் பினராயி விஜயன் நாளை அமெரிக்கா பயணம்

திருவனந்தபுரம்: மருத்துவ சிகிச்சைக்காக கேரள முதல்வர் பினராயி விஜயன் நாளை மீண்டும் அமெரிக்கா செல்கிறார். கேரள முதல்வர் பினராயி விஜயன் புற்றுநோய்க்காக அமெரிக்காவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த இரு வருடங்களுக்கு முன் முதன் முதலாக அவர் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்றார்.  இதன் பின் தொடர் சிகிச்சைக்காக கடந்த ஜனவரி மாதம் மீண்டும் அமெரிக்கா சென்றார்.

இந்நிலையில் பினராயி விஜயன் 3வது முறையாக சிகிச்சைக்காக நாளை அமெரிக்கா செல்ல உள்ளார். இரு வாரங்களுக்கு மேல் அவர் மருத்துவமனையில் தங்கியிருப்பார் என கூறப்படுகிறது. மே மாதம் 2வது வாரத்தில் அவர் கேரளா திரும்புகிறார். அதுவரை முதல்வர் பொறுப்பு வேறு யாருக்கும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: